சுவிட்சர்லாந்தில் பணமோசடி வழக்கை எதிர்கொள்ளும் முதல் வங்கி பால்கன்....

#world_news
சுவிட்சர்லாந்தில் பணமோசடி வழக்கை எதிர்கொள்ளும் முதல் வங்கி பால்கன்....

சுவிற்சலாந்தில் முதல்முறையாக பணமோசடி குற்றங்களுக்கு பதிலளிக்க பல்கன் தனியார் வங்கி நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தனது செயல்பாடுகளை நிறுத்திய பல்கன் தனியார் வங்கி, மலேசியாவின் இறையாண்மை நிதியான 1எம்டிபியிலிருந்து 3.8மிலியன் டொலர்கள், அதாவது 3.5மிலியன் பிராங்குகள் மோசடி செய்துள்ளது.

இதற்கு அதன் முன்னாள் இயக்குனருக்கு உதவியாதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி எட்வர்டோ லீமன் திங்கள் நேற்று தொடங்கிய வழக்கில் மத்திய குற்றவியல் நிதிமன்றத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இருவரும் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.

1எம்டிபி ஊழலில் ஈடுபட்ட வங்கிகள் மீது சுவிஸ் அதிகாரிகள் கடுமையாக இறங்கினர். அபுதாபிக்கு சொந்தமான பல்கன் தனியார் வங்கிக்கு 2016இல் சட்டவிரோதமாக கிடைத்த இலாபத்தில் 2.5மிலியனை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. பின்னர் சுவிற்சலாந்தில் செயல்படுவதை நிறுத்த முடிவு செய்யதது. அதே ஆண்டில் பிஎஸ்ஐ வங்கி தனது வணிகத்தினை விற்கவும், நிதி கட்டுப்பாட்டாளரின் அழுத்தத்தின் கீழ் கதவுகனை மூடவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. ஏனைய வங்கிகள் 1எம்டிபி தொடர்பாக நிதி கட்டுப்பாட்டாளரால் கண்டிக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4