சவரம் செய்யவோ அல்லது வடிவமைக்கவோ கூடாது தடை விதித்த தலிபான்கள்

Keerthi
4 years ago
சவரம் செய்யவோ அல்லது வடிவமைக்கவோ கூடாது தடை விதித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின்னர் சர்வதேச சமூகமும் அந்நாட்டு மக்கள் குறித்து கவலை அடைந்துள்ளனர். எனினும் தொடக்கத்தில் அமைதி காத்து, முன்புபோன்று இல்லாமல் மக்களுக்கு நிம்மதியான அரசை அமைப்போம் என தலிபான்கள் கூறி வந்நதனர்.

இந்த நிலையில் புதிய ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் தற்போது பல்வேறு சட்டதிட்டங்களை விதித்து உள்ளனர். தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை தலிபான்கள் விதித்து உள்ளனர்.

அதாவது, முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளனர்.

முடிதிருத்தும் கலைஞர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலிபான்கள் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அரசின் மத போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களுக்கு தலிபான்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தலைமுடி மற்றும் தாடியை வெட்டும்போது முடி திருத்தம் செய்யும் கலைஞர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் புகார் சொல்வதற்கான உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஹெராத் மாகாணத்தில் தலிபான் சட்டத்தின்படி நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் பொது வெளிகளில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4