காளியின் கழுத்திலிருந்த நகைகளைத் திருடியவர் கைது 

#Arrest
Prathees
4 years ago
காளியின் கழுத்திலிருந்த நகைகளைத் திருடியவர் கைது 

கோவில் சிலைகளில் தங்க நகைகளைத் திருடிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி- மஹவலவத்த சிவன்  கோவிலிலுள்ள காளி சிலையிலிருந்து நகைகள் காணாமல் போயுள்ளதாக இந்த மாதம் 17ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இதனையடுத்து  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நபர்
ஒருவர்இ நிவித்திகல நகரிலுள்ள அடகு நிலையத்தில் சில தங்க ஆபரணங்களை அடகு
வைத்துள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

 கிடைத்த தகவலுக்கு அமைய  முடி திருத்துனராக தொழில் செய்யும் 39 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைவாக   திருடப்பட்ட  நகைகள் நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் தமக்கு தொழில் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான் தொடர்ச்சியாக நிவித்திகல பிரதேசத்திலுள்ள 7 கோவில்களிலுள்ள சிலைகளின் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக  சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட நகைகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4