மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன் 

#Death #Police
Prathees
4 years ago
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன் 

குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (26 ம் திகதி) இரவு 7.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு  சம்பவம்  இடம்பெற்ற 

இதில்  எம்பிலிப்பிட்டிய, கரதமண்டியவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான இந்திர மல்காந்தி (35) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான  வீரசிங்க ஆராச்சிலகே தம்மிக குமார அல்லது அனுர (47) என்றழைக்கப்படும் அவர் எம்பிலிப்பிட்டிய பகுதியில் அனுர மல்ஷலாவ என்ற நிறுவனத்தை சில காலமாக நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகளும்இ ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவருக்கும் இடையே சில காலமாக குடும்பத் தகராறு இருந்தமை தெரியவந்தது. 

நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறின் விளைவாக, அவர் 26 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் தனது வீட்டின் முன்புறம்  துப்பாக்கியால்  மனைவியின் தலையில் சுட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4