இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி? டொலர் கட்டாயமாகும் சாத்தியம்?

#SriLanka #Ajith Nivat Cabral
Yuga
4 years ago
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி? டொலர் கட்டாயமாகும் சாத்தியம்?

அமெரிக்க டொலரில் வரி செலுத்த இயலுமானோருக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக மத்திய வங்கி ஆளுநருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கலந்துரையாடலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அமெரிக்க டாலர்களில் வெளிநாடுகளில் வாகனங்களை வாங்கி, அந்த வாகனத்திற்கு இலங்கையில் செலுத்த வேண்டிய வரியை அமெரிக்க டாலரில் செலுத்த ஒப்புக்கொள்பவர்கள் எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இச்செயன்முறை குறித்து மேலும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4