ராஜபக்ச அரசின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்! - சஜித் சூளுரை

Prabha Praneetha
4 years ago
ராஜபக்ச அரசின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்! - சஜித் சூளுரை

"கோட்டாபய - மஹிந்த தலைமையிலான ராஜபக்ச அரசின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நில அபகரிப்பு குறித்து கேள்விப்பட்டவுடன் அது தொடர்பாக ஆராய்வதற்காக, பாணமவிலுள்ள ஸ்ரீ போதிருக்காராமயவுக்கு இன்று விஜயம் மேற்கொண்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டில் அரசால் ஒரு புதிய வகை நில அபகரிப்பு நடைபெற்று வருகின்றது. பாணம பிரதேசம் அதற்குப் பலியாகிவிட்டது.

உள்நாட்டு வளங்களைத் துட்சமாக மதித்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசு, மறுபுறம் அப்பாவி பொதுமக்களின் நிலங்களைச் சூறையாடுவதையும் ஊக்குவிக்கின்றது.

அரசியல் அதிகாரம் இருப்பதற்காக, பணத்துக்காக யாரும் இந்த நிலங்களை கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது.

அரசு நாட்டை ஒரு மோசமான நிலைக்குத் தள்ளுகின்றது. காட்டுச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்தக் கொள்ளைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4