எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையில் வெளியாகவுள்ள அறிவிப்பு

#SriLanka #Curfew
Yuga
4 years ago
எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையில் வெளியாகவுள்ள அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி எதிர்வரும் இரு தினங்களுக்குள் கட்டாயம் அறிவிப்பார் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் நேற்று (27) வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை சுமார் 1000 வரை குறைக்க முடிந்துள்ளதாகவும், கொவிட் உயிரிழப்புக்களை 50 தொடக்கம் 75 வரை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி எதிர்வரும் இரு தினங்களுக்குள் கட்டாயம் அறிவிப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டியை தயாரிக்குமாறு ஜனாதிபதி, சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4