இலங்கையில் ஊரடங்கு தளருமா? தொடருமா? ஜனாதிபதியின் கையில் முடிவு

#SriLanka #Gotabaya Rajapaksa
Yuga
4 years ago
இலங்கையில்  ஊரடங்கு தளருமா? தொடருமா? ஜனாதிபதியின் கையில் முடிவு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்தான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எடுக்கப்படவுள்ளது.

அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் கொரோனா தடுப்புச் செயலணியின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடு திறக்கப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும், தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

அதற்கமைய போக்குவரத்துச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.

நாடு திறக்கப்பட்டாலும் பொது நிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட உடனடி அனுமதி வழங்கப்படாது.

இதேவேளை, பாடசாலைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4