இராணுவ வீரரின் குடும்பத்தினருக்காக ‘நன்கொடை’ சேகரிப்பு! - இதுவரை 3000 பேர் பங்கேற்பு!

#world_news
இராணுவ வீரரின் குடும்பத்தினருக்காக ‘நன்கொடை’ சேகரிப்பு! - இதுவரை 3000 பேர் பங்கேற்பு!

மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் கொல்லப்பட்ட Maxime Blasco இன் குடும்பத்தினருக்காக நன்கொடை சேகரிக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு Varces (Isère) நகரில் உள்ள படைப்பிரிவுக்கு இராணுவத்தில் சேர்ந்த இவர், மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள பயணித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது எதிரிகளிடம் சிக்கி, சித்திரவதை அனுபவித்து கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 34 வயதுடைய Maxime Blasco இற்கு 8 வயதில் மகனும், மனைவியும் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்துக்காக தற்போது நன்கொடை சேகரிக்கப்பட்டு வருகின்றது.

நேற்று திங்கட்கிழமை மாலை வரை €78,000 யூரோக்கள் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும், இதில் 3000 பேர் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4