பிரான்ஸ் ஜனாதிபதி மீது இனம் தெரியாத நபரால் முட்டை வீச்சு!

#world_news
பிரான்ஸ் ஜனாதிபதி மீது இனம் தெரியாத நபரால் முட்டை வீச்சு!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), திங்கட்கிழமை லியோனில் (Lyon) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சிக்கு சென்றிருந்தார்.

இதன்போது, கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றபோது அவரது முகம் மற்றும் தோள்பட்டைக்கு இடையே ஒரு முட்டை வேகமாக வந்து மோதியது. எனினும் , அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை உடைந்து தெறிக்கவில்லை.

இதனையடுத்து உடனடியாக அவர் அவரது மெய் காப்பாளர்களால் பாதுகாக்கப்பட்டார். அதே நேரத்தில், ஜனாதிபதியின் மீது முட்டையை வீசிய நபரை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர். மேலும், பாதுகாப்பு காரணத்திற்காக அந்த நபர் பாதுகாப்புப் படையினரால் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த காட்சிகள் பதிவான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்பவ இடத்திலுள்ள செய்தியாளர்களிடம் பேசிய, மக்ரோன் (Emmanuel Macron), "அந்த நபர் என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியது இருந்தால், அவர் நேராக என்னிடம் வரலாம்" என கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதியின் மீது முட்டை வீசப்பட்டதன் நோக்கம் பற்றிய எந்த தகவலும் புதுப்பிக்கப்படவில்லை.

எனினும் , இதுபோல் பொது இடத்தில் திடீர் தாக்குதலுக்கு மக்ரோன்  (Emmanuel Macron)  இலக்காக இருப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு சென்ற போது ஒருவர், பிரெஞ்சு ஜனாதிபதியின் முகத்தில் அறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4