மரக்குற்றிகள் விழுந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

#SriLanka #Death
Yuga
4 years ago
மரக்குற்றிகள்  விழுந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை இறக்கும்போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே வீழ்ந்ததால் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி - கட்டுகஸ்தோட்டையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கிரேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4