கோவிலுக்குச் சென்ற பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற பூசாரி

#Arrest #Sexual Abuse
Prathees
4 years ago
கோவிலுக்குச் சென்ற பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற பூசாரி

சிலாபம் மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்புகட்டிய பகுதியில் உள்ள கோவிலுக்கு சடங்கு செய்ய வந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக பூசாரியை மாதம்பே பொலிசார் கைது செய்தனர்.

குறித்த நபர் நேற்று முன்தினம்  (26 ஆம் திகதி) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பூசாரி  அப்பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் ஆலயத்தை நடத்தி வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் சடங்கு செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் பூசாரி குறித்த பெண்ணின் தாயிடம் கோவில்  இருக்கும் வீட்டின் சமையலறைக்குச் சென்று சடங்கு செய்வதற்கு தேவையான பொருட்களைக் கூறி எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார்.

தாய் சென்றதையடுத்து குறித்த பெண்ணை  பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பூசாரி தும்மலசூரிய யகன்வெல பகுதியில் வசிப்பவர்.  இந்த கிராமத்திற்கு சுமார் 7 மாதங்களுக்கு முன்பு வந்ததாகவும்இ அவரது நண்பர்களின் வீட்டில் கோவிலை பராமரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பூசாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

எனினும்இ இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை எனவும்  சமூகத்தில் முகம்கொடுக்க முடியாமை இதற்கு காரணமெனவும்   பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பூசாரி 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.

 சந்தேகநபர்  சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4