இலங்கையில் அரிசி வகைகளுக்கான விற்பனை விலை அறிவிப்பு!

#SriLanka #prices #rice
Yuga
4 years ago
இலங்கையில் அரிசி வகைகளுக்கான விற்பனை விலை அறிவிப்பு!

மூன்று வகையான அரிசி வகைகளுக்கு புதிய சில்லறை விற்பனை விலையை, அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று (28) அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசி 115 ரூபாவிற்கும், சம்பா அரிசி 140 ரூபாவிற்கும், கீரி சம்பா அரிசி 165 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசி 62.50 ரூபாவிற்கும், சம்பா 70 ரூபாவிற்கும், கீரிசம்பா 80 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4