தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

#Arrest #Colombo
Prathees
4 years ago
தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

தேசிய ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தை பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநர் ஒருவரே இவ்வாறு சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் முன்னதாக குறித்த நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி தரிந்ர கல்பகே கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

 இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4