உலக வரலாற்றில் உருளைக்கிழங்கு ஏற்படுத்திய தாக்கம்

#history
Prathees
3 years ago
உலக வரலாற்றில் உருளைக்கிழங்கு ஏற்படுத்திய தாக்கம்

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் மதிக்கப்படாத உணவு. பன்றிக்கு தரும் முக்கிய உணவாக இது இருந்தது அதுவும் நோஞ்சான பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவாக இது இருந்துள்ளது..

உருளைக்கிழங்கை சாப்பிடுவது கேவலமான செயலாக இருந்த காலமும் உண்டு..

போர் காலகட்டத்தில் அடிமைகளுக்கு வழங்கப்படும் உணவாகவும் இருந்தது..

அவித்த உருளைக்கிழங்கு ஒரு துண்டு  பல கருப்பு இன ஏழைகளுக்கு அன்றாட உணவாகவும் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது..

இதற்கு காரணம் இத்தாலி போன்ற  மேலைநாட்டு பணக்காரர்கள் செய்த செயல் தான்..

பொதுவாக உருளைக்கிழங்கு என்பது மற்ற காய்கறிகள் போன்று அல்ல, உருளை கிழங்கு ஒரு வகையான பசியாற்றும் உணவு..

சோறுக்கு பதில் உருளைகிழங்கை மட்டுமே உண்டு வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளனர்..

இந்த உருளைக்கிழங்கு வரலாற்றில் பயங்கர தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆபிரிக்க பகுதியில் அடிக்கடி போர் நடப்பதால் அப்பகுதி மக்கள் பதுங்குகுழிகளை அமைத்து அங்கே சிறிது சிறிதாக உருளைக்கிழங்கை தான் சேமித்து வைத்து இருந்துள்ளார்கள்..

காரணம் போர் முடிய மாதக்கணக்கில் கூட ஆகலாம் அதுவரை பதுங்குகுழிக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்..

அந்த நேரத்தில் உருளைக்கிழங்கு தான் முழு நேர உணவாக உண்டு வந்துள்ளனர்..

மன்னர் காலத்தில் பஞ்சத்தை போக்க உருளை கிழங்கை பயிருடுவதையும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல மன்னர்கள் தங்களது தோட்டதில் உருளைகிழங்கை பயிருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதும் வரலாறு தான்..

Maria Antonia பிரான்ஸ் நாட்டின் இராணி என்றழைக்கப்படும் இந்த அரசி கூட உருளை கிழங்கின் பெறுமதியை உணர்ந்து உருளைச் செடியின் பூவை மகுடமாக தலையில் வைத்து இருந்தால் என்றும் வரலாறு உள்ளது..

இந்த வரலாற்றை ஏன் கூறினேன் தெரியுமா?

சில பணக்காரர்கள்  சமீபத்திய பணக்கார உணவாகவுள்ள  (ப்ரெஞ் ஃபிரை) உருளைக்கிழங்கு பொரியல்  வாங்கி உதடு படாமல் சாப்பிடும் போது இந்த வரலாற்றை சொல்ல தூண்டியது..

ஃபிங்கர் சிப்ஸ் எனவும் ஃபரெஞ் ஃபிரை எனவும் விற்பனை செய்யும் பெரிய பெரிய சாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ள குளிர்சாதன அரங்கத்தில் உள்ள ப்ரெஞ் ஃபிரை புகைப்படங்கள் நம்மை அழைக்கிறது..

அவைகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?

இவைகள் பணக்காரன் சாப்பிடும் உணவு போன்றே ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது..

பெரு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் ஒரு நாள் உணவாக ஒரு அவித்த உருளை கிழங்கும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும் தான் பெரும்பாலான உணவாக இருந்துள்ளது என்ற தகவலும் உண்டு..

உங்கள் வீட்டில் இனி உருளைக்கிழங்கு கொண்டு வந்து வைத்தால் பல ஆயிரம் ஆண்டுகளுகளாக பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உணவாக இது இருந்துள்ளது என்ற மனதுடன் உண்ணுங்கள்..

ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் இப்படி உணவாக காலம் முழுவதும் உருளை கிழங்கு உண்ட மக்களுக்கு வாய்வு பிரச்சினை இருந்து இருக்க வேண்டுமே அதனால் இந்த உணவின் வீரியம் குறைந்திருக்க வேண்டுமே இதைப்பற்றி வரலாற்றில் எங்குமே குறிப்பு இல்லை.

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது நம்மிடம் எப்படி தொற்றிக் கொண்டது.சிந்தியுங்கள் புலப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!