சல்மான் கானுக்கு பதிலாக கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்

#Actor #Actress
Prasu
4 years ago
சல்மான் கானுக்கு பதிலாக கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக  களமிறங்கும் மக்கள் செல்வன்

வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பொலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ்.

அப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிகை கத்ரீனா கைஃப் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

இப்படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சல்மான் கானை மனதில் வைத்து தான் எழுதினாராம், அந்த கதையும் சல்மானுக்கு பிடித்திருந்தது.

ஆனால் ஆக்ஷன் ஹீரோவான சல்மான் கானுக்கு ஸ்ரீராம் ராகவனின் புத்திசாலித்தனமான த்ரில்லர் கதைகள் போதாது என்பதால் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தான் தற்போது அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4