லங்காதீப பத்திரிகை அலுவலத்திற்குள் சென்ற CID அதிகாரிகள்

Prasu
4 years ago
லங்காதீப பத்திரிகை அலுவலத்திற்குள் சென்ற CID அதிகாரிகள்

நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன, லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்று குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், லங்காதீப பத்திரிகை அலுவலகத்திற்கு இன்று சென்றுள்ளனர்.

கொழும்பு − ஹுனுபிட்டி பகுதியிலுள்ள பத்திரிகையின் தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் இன்று சென்றுள்ளதாக அந்த பத்திரிகையின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க தாம் தயார் இல்லை என லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெரிவித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.எனினும், வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக வேறொரு தினத்தில் வருகைத் தருவதாக கூறிய நிலையிலேயே, அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும இன்று தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4