சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 7 பேர் உயிரிழப்பு

#China #Death
Prasu
4 years ago
சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 7 பேர் உயிரிழப்பு

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கே டையான்குவான் கவுன்டி பகுதியில் லபாஹே என்ற நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.  

இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 17 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.  பலர் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.  அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  7 பேர் உயிரிழந்து உள்ளனர்.  2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, சிச்சுவான் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து டையான்குவான் பகுதிக்கு 400க்கும் மேற்பட்ட நபர்கள், தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  140 பேர் இடிபாடுகளை அகற்றும் பணிக்கு சென்றனர்.  மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4