IPL Match42 - பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

Prasu
4 years ago
IPL Match42 -  பஞ்சாப்   அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கிராம் 42 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, பொல்லார்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 16 ரன்னுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டி காக் 27 ரன்னிலும், சவுரப் திவாரி 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தபோது, மும்பை இந்தியன்ஸ் 15.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது.  29 பந்தில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவர் முடிவில் 97 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 4 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது.

17-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் 11 ரன்கள் கிடைத்தது. 18-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் பொல்லார்டு ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸ்க்கு கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஷமி வீசினார். 3-வது பந்தையும், 5-வது பந்தையும் பவுண்டரிக்கு தூக்கிய ஹர்திக் பாண்ட்யா, கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 40 ரன்கள் எடுத்தும், பொல்லார்டு 7 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4