சுவிற்சலாந்து யுபிஎஸ் வங்கி தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு!

#world_news
சுவிற்சலாந்து யுபிஎஸ் வங்கி தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு!

நீதிபதி ஒருவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாகசுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கிகளில் ஒன்றான யூ.பி.எஸ் (UBS) வங்கி தொடர்பில் பிரான்ஸ் நீதிமன்றினால் நேற்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பிற்கு உடந்தையாக செயற்பட்டதாகத் தெரிவித்து பிரான்ஸ் நீதிமன்றம் யூ.பி.எஸ் வங்கிக்கு 4.5 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த அபராத விதிப்பிற்கு எதிராக சுவிட்சர்லாந்து வங்கி மேன்முறையீடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு யூ.பி.எஸ் வங்கி உடந்தையாக செயற்பட்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4