எம்.பி. பதவியைத் துறந்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக களம் குதிக்க தயாசிறி தயார்

Prabha Praneetha
4 years ago
எம்.பி. பதவியைத் துறந்துவிட்டு  முதலமைச்சர் வேட்பாளராக களம் குதிக்க தயாசிறி தயார்

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வடமேல் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்."

- இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

"இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதற்கு நான் தயார். வடமேல் மாகாணத்தில் இருந்து பல தரப்பினரும் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னர், வடமேல் மாகாண தேர்தலில் தயாசிறி ஜயசேகர போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4