கொரோனாத் தொற்றால் மேலும் 55 பேர் மரணம்!

Prabha Praneetha
4 years ago
 கொரோனாத் தொற்றால் மேலும் 55 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 55 பேரில் 26 பெண்களும் 29 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 10 ஆண்கள், 6 பெண்கள் என 16 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 39 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 19 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4