தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 317 பேர் கைது!

Prabha Praneetha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 317 பேர் கைது!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 317 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 914 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த குற்றச்சாட்டில் 161 வாகனங்களில் பயணித்த 274 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4