யாழில் பிரார்த்தனை செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

#Jaffna #Prayer #Death #Covid 19
Yuga
4 years ago
யாழில் பிரார்த்தனை செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் ஜெபித்துக்கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி-அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த 51 வயதுடைய செபபாக்கியம் கிறேஸ் மணி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4