தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 333 பேர் கைது!

Reha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 333 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 333 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 21 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 79 ஆயிரத்து 247 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மேல் மாகாணத்தில் நுழையும் மற்றும் வெளியேறும்  இடங்களில் 1,149 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன என்றும், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணிக்க முயன்ற 251 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4