இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்- வெளியான அவசர அறிக்கை

#SriLanka
Yuga
4 years ago
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்- வெளியான அவசர அறிக்கை

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வூப் பெற்ற ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, ஜெனரல் கமல் குணரத்னவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4