மட்டக்களப்பில் ஆபாச  படத்தைக் காட்டி 10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

#Batticaloa #Arrest #Sexual Abuse
Prathees
4 years ago
மட்டக்களப்பில் ஆபாச  படத்தைக் காட்டி 10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகம்  மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவர் கைது செசய்யபப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி  பலாத்தகாரம் செய்துள்ளார் என  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிரவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து  குறித்த இளைஞனை கைது செய்து  இன்று (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4