நான்கு பிள்ளைகளின் தாயார் குளவி கொட்டி பரிதாப மரணம்

Reha
4 years ago
நான்கு பிள்ளைகளின் தாயார் குளவி கொட்டி பரிதாப மரணம்

புத்தளம் மாவட்டம், முந்தளம் பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

கந்ததோடுவாவ கிராமத்தில் இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாய் (வயது 57) புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று முந்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னை மரத்தில் குளவிகள் கூடு கட்டியிருந்த நிலையில், கடுங்காற்று காரணமாக குளவிக்கூடு உடைந்து கீழே விழுந்துள்ளது. இதன்போது பெரும் எண்ணிக்கையிலான குளவிகள் கலைந்து வந்து குறித்த பெண்ணைக் கொட்டியுள்ளது.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4