யானை தாக்கி விவசாயி பலி

#Death
Prasu
4 years ago
யானை தாக்கி விவசாயி பலி

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளாமைச்சேனை பிரதேசத்தில் இன்று (29) அதிகாலை யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்போக வேளாண்மை செய்கைக்கு தனது வயலை தயார் படுத்தும் நிலையில் வயலில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் இன்று அதிகாலை வயல் பிரதேசத்திற்கு வந்த யானை குறித்த நபர் தங்கியிருந்த வாடியை சேதப்படுத்தியதுடன் விவசாயியயும் தாக்கியதில் குறித்த விவசாயி உயிர் இழந்துள்ளார்.

யானை தாக்கியதில் உயிர் இழந்தவர் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை பாடசாலை வீதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அலியார் முகம்மது காசிம் (வயது 54) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான விசாரனைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4