பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமான குழந்தை உயிரிழப்பு! விசாரணைகள் ஆரம்பம்

#Point-Pedro #Death
Yuga
4 years ago
பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமான குழந்தை உயிரிழப்பு! விசாரணைகள் ஆரம்பம்

யாழ்.பருத்தித்துறையில் பிறந்து 1 மாதமேயான குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் குழந்தையின் இறப்பு தொடர்பில் இன்று(30) சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேற்படி குழந்தை வீட்டில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் குழந்தையின் தாய்க்கு கடந்த 22ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து நேற்றய தினம் குழந்தைக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குழந்தையின் மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் சட்டவைத்திய அதிகாரி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4