வதந்தி - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

Prabha Praneetha
3 years ago
வதந்தி - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார்கள். 

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போவதாக வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது.

இதுதவிர தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா, விரைவில் மும்பைக்கு குடியேர உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாற இருக்குறீர்களா’ எனக் கேட்டார். 

இதற்கு “எப்படி இந்த வதந்தி பரவியது எனத் தெரியவில்லை. மற்ற நூறு வதந்திகளைப் போல இதுவும் உண்மையில்லை. எப்போதுமே எனக்கு ஐதராபாத் தான் வீடு. எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது ஐதராபாத் தான், நான் இங்கு தான் வசிப்பேன்” என பதிலளித்தார் சமந்தா. 

இந்த கலந்துரையாடலின் போது, நடிகை சமந்தா, விவாகரத்து விவகாரம் குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!