இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு வெளியானது!

#SriLanka
Yuga
4 years ago
இலங்கையில்  பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு வெளியானது!

நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

முன்னதாக நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் தற்போது இந்த பயணக்கட்டுப்பாட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் வழிகாட்டல் கோவையை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து தடை வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4