ஆறு மாதங்களாக ஆழ்கடலில் தத்தளித்த இரு  சோமாலியர்கள் பேருவளைக்கு அழைத்து வரப்பட்டனர்!

#Somalia #Fisherman
Prathees
4 years ago
ஆறு மாதங்களாக ஆழ்கடலில் தத்தளித்த இரு  சோமாலியர்கள் பேருவளைக்கு அழைத்து வரப்பட்டனர்!

மீன்பிடி கப்பலில் ஏற்பட்ட கோளாறு  காரணமாக ஏப்ரல் மாதம் முதல் கடலில் தத்தளித்த நான்கு சோமாலிய மீனவர்கள் பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் பயணம் செய்த மீனவர்கள் குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் ப பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு  அழைத்து வரப்பட்டனர். 25 மற்றும் 30 வயதுடைய இரண்டு சோமாலிய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8 அன்றுஇ பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குழு நான்கு சோமாலிய மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.

இரண்டு படகுகளில்  இவ்விருவராக ஏற்றிக் கொண்டு பேருவளை மீன்பிடி துறைமுகத்தை நோக்கி வந்துள்ளனர்.

எனினும் இருவரை ஏற்றிக் கொண்ட  மீன்பிடி படகு முதலில் கரைக்குத் திரும்பியதுடன் மற்றைய இரு சோமாலியர்களுடன் மீன்பிடி படகு சில தினங்களில் கரைக்குத் திரும்பிவிடுமென் கடலோர காவல்படை அலுவலகம் தெரிவித்துள்ளது; 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4