தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 290 பேர் சிக்கினர்!

Reha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 290 பேர் சிக்கினர்!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 537ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 152 வாகனங்களில் பயணித்த 286 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4