அசத்தலான சுவையில் இளநீர் பாயாசம்

Prabha Praneetha
4 years ago
அசத்தலான சுவையில் இளநீர் பாயாசம்

தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்
சர்க்கரை - 1/4 கப்
தேங்காய் வழுக்கை - 3/4 கப்
தேங்காய் பால் - 3/4 கப்
இளநீர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

செய்முறை

பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள். 2 கப் பால் 1- 1/2 கப் பாலாக வருமாறு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்ததும் சர்க்கரை சேர்க்க வேண்டும். கலந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

வழுக்கை தேங்காயை கொஞ்சம் இளநீர் ஊற்றி ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பால் நன்கு சூடு தணிந்து குளுமையானதும் அதில் அரைத்த வழுக்கைத் தேங்காய் , இளநீர் சேர்த்துக் கலக்கிவிடுங்கள்.

பின் தேங்காய் பாலும் சேர்த்துக் கலக்குங்கள். வாசனைக்கு ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது பாயாசம் ரெடி. அதை ஃபிரிஜ்ஜில் வைத்து குளுமையானதும் ஊற்றி குடிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4