13000 ஐ நெருங்கும் கோவிட் மரணங்கள்

#Covid 19 #Corona Virus #Death
Prathees
4 years ago
13000 ஐ நெருங்கும் கோவிட்  மரணங்கள்

இலங்கையில் கோவிட் தொற்றால் 59பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

அதன்பபடி, நாட்டில்  கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,965 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 59 பேரில்  31 பெண்கள் மற்றும் 28 ஆண்கள் அடங்குவதாக என்று சுகாதார சேவைகள் பபணிப்பபாளர் தெரிவவித்துள்ளார். 

இறந்தவர்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 47 பேரும் 30 வயதிற்குட்பட்ட பெண்ணும் அடங்குவதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  மேலும் 734 கோவிட் தொற்றாளர்கள்   இன்று (30) அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனஎ  அடையாளம் காணப்பட்டவர்ககளின் எஎண்ணிக்கை  517,199 ஆக  உயர்வடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4