கொரோனா முடக்கம் தொடர்ந்தும் சிறுவர்களின் மனநிலையை பாதித்துள்ளது

Keerthi
3 years ago
கொரோனா முடக்கம் தொடர்ந்தும் சிறுவர்களின் மனநிலையை பாதித்துள்ளது

கடந்த கொரோனா முடக்கத்திலிருந்து இதுவரை எந்த சிறுவர்களுக்கும் இளம்வயதினருக்கும் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டை போன்Nறு 2021 ஆம் ஆண்டும் ஆறில் ஒரு சிறுவர் மனநிலை பாதிக்கப்பட்டவராய் உள்ளதாக இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலை 2017 ஆம் ஆண்டு ஒன்பது சிறுவர்களுக்கு ஒருவர் என காணப்பட்டது.

இந்தக் காலப்பகுதிகளில் தமது மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக ஆறு தொடக்கம் 16 வயதான 40 வீதமானவர்களும் 17 – 23 வயதானவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆண்பிள்ளைகளையும் விட பெண் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3600 சிறுவர்களிடம் இந்த ஆய்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.

குறித்த வயது பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள இந்த நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக சிறுவர் நல அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னால் அமர்ந்து இவற்றை பார்த்துக்கொண்டிருப்பது சரியாக இருக்காது அவர்களுக்கு மீட்சிப் பெற ஒத்துழைக்கும் வேண்டும் என்றும் தெரிவி;த்துள்ளனர்
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!