Champions League 2021 - அணிக்காக தனது முதல் கோலை பதிவு செய்த மெஸ்ஸி

Prasu
4 years ago
Champions  League 2021  - அணிக்காக தனது முதல் கோலை பதிவு செய்த மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34. கிளப் அரங்கில் பார்சிலோனா அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடிய (778 போட்டிகள், 672 கோல்) இவர், தற்போது பிரான்சின், பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணியில் இணைந்துள்ளார்.

இதனிடையே ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரிஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. போட்டியின் 8வது நிமிடம் பாரிஸ் வீரர் கியுயே, ஒரு கோல் அடித்தார். அடுத்து இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற மெஸ்சி, 74வது நிமிடம் எம்பாப்வே கொடுத்த பந்தை வாங்கி, அப்படியே கோலாக மாற்றினார்.

முடிவில் பாரிஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் இரு போட்டிகளில் ஏமாற்றிய மெஸ்சி, பாரிஸ் அணிக்காக களமிறங்கிய மூன்றாவது போட்டியில் முதல் கோல் அடித்தார். இதுகுறித்து கூறுகையில்,''கொஞ்சம் கொஞ்சமாக சக வீரர்களுடன் 'செட்' ஆகி வருகிறேன். சமீபத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்க வில்லை. இருப்பினும் முதன் முறையாக கோல் அடித்தது மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4