சுவிற்சலாந்தில் 58 சதவீதமானவர்கள் முழுத்தடுப்பூசியையும் பெற்றுவிட்டனர்.

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்தில் 58 சதவீதமானவர்கள் முழுத்தடுப்பூசியையும் பெற்றுவிட்டனர்.

சுவிற்சலாந்தில் செப்டம்பர் 29ம் திகதி நடந்து முடிந்த 24மணி நேரத்தில் கொவிட் தொற்றுக் காரணமாக வைத்தியசாலையில் 561 பேரும், அதில் தீவிர சிகிச்சை பிரிவில் 185 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.  அன்று 5 பேர் இறந்துள்ளனர்.

சுவிற்சலாந்தில் தற்போது 58சதவீதமானோர் முழுத்தடுப்பூசியும் முழுசனத்தொகையில் பெற்றுவிட்டனர். இனிமேல் இளம் வயதினரை குறி வைத்து தடுப்புசி ஏற்றும் பணிகளுக்காக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பைசர், மொடேர்னா தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்க தகுதியுடையது. அதே வேளை அரசாங்கம் ஜான்சன் நிறுவனத்துடன் ஜோன்சன் அன் ஜோன்சன் mRNA தடுப்பூசிகள் 150000க்கான ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட்டுள்ளது.

கடந்த வாரத்தினை விட இவ்வாராம் கொவிட் தொற்று 1225இற்கும் குறைவான அளவு அல்லது 24வீத வீழ்ச்சி காணப்படுகிறது. பெரும்பாலான தொற்றுக்கள் 10-19 வயதினரையோ தாக்கியது. தீவிர சிகிச்சை பிரிவுகளின் 22வீதம் கொவிட் தொற்று காரணமாக நிரம்பியது.

சுவிஸின் 8.6மிலியன் சனத்தொகையில் 10600 பேர் இந்த தொற்று காரணமாக இறந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4