ஊவா, தென் மாகாண பாடசாலைகளை திறக்க திட்டம்

Prabha Praneetha
4 years ago
ஊவா, தென் மாகாண பாடசாலைகளை திறக்க திட்டம்

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து மாகாண கல்வி காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, ​தென் மாகாணத்தில் 200 மாணவர்களை விட குறைவாக கொண்ட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் அமைந்துள்ள 514 பாடசாலைகள் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4