கோட்டாபயவின் மகன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Reha
4 years ago
கோட்டாபயவின் மகன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

அரசாங்கத்தையும் ஆட்சியையும் சரிவர நடத்திச் செல்ல முடியாதவாறு குடும்ப அங்கத்தவர்களே காலைப்பிடித்து இழுத்தால் ஆட்சியை ஒப்புக்கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிடும்படியும் மனோஜ் ராஜபக்ச தந்தையிடம் கோரியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வரான மனோஜ் ராஜபக்ச தனது தந்தையிடம் விசேட கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய, தற்போது அவரது மகனது குடும்பத்தாருடன் இருக்கின்றார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில் அவர் அமெரிக்கா சென்ற நாளிலிருந்து அவரது மகன் மனோஜ் ராஜபக்ச விசேட வேண்டுகோளினை முன்வைத்து வருவதாக அறியமுடிகின்றது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4