கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

#Accident #Jaffna #Death
Prathees
4 years ago
கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மற்றொருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்தனர்..

கிளிநொச்சி, அம்பாள்புரத்தை சேர்ந்த 40 வயதுடைய அ.சுரேஷ்குமார் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மிருசுவில்  பகுதியில்  பட்டா வாகனத்தை மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4