மாணவி துஷ்பிரயோகம்: வயோதிபருக்கு விளக்கமறியல்!

#Sexual Abuse #Court Order
Prathees
4 years ago
மாணவி துஷ்பிரயோகம்: வயோதிபருக்கு விளக்கமறியல்!

14 வயதான பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, பரிசோதனைக்காக, டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4