நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு கூகுள் வழங்கிய கௌரவம்

#TamilCinema #Actor
Prasu
4 years ago
நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு கூகுள் வழங்கிய கௌரவம்

சினிமா உலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1928-ம் ஆண்டு அக்டோபடர் மாதம் 1-ந்தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜி கணேசன் பிறந்தார். காலத்தால் அழியா காவியப்படைப்புகளை தந்த அவர், தன் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதை திரையில் வெளிப்படுத்தியவர்.

செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். நடிகர் திலகம் என அழைக்கப்படும் அவர் தான் நடித்து 1952-இல் வெளியான முதல் படமான ‘பராசக்தி’யின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். எந்த படம் நடித்தாலும், அந்த படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். 1961-ஆம் ஆண்டு வெளியான ‘பாசமலர்’ படத்தில் அனைவரையும் அழ வைத்தார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உருக்கமாக நடித்திருப்பார். காலத்தால் போற்றப்பட வேண்டிய கலைஞர்களுள் சிவாஜிகணேசனும் ஒருவர்.

செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று அவரை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனமானது அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4