IPL Match45 - நாணயசுழற்சி வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு 166 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா

Prasu
4 years ago
IPL Match45  - நாணயசுழற்சி வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு  166  ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி வெங்கடேஷ் அய்யருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ரன் வேகம் அதிகரித்தது.

குறிப்பாக, வெங்கடேஷ் அய்யர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இவர் 49 பந்தில் ஒரு சிக்சர், 9 பவுண்டரி உள்பட 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திரிபாதி 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  கேப்டன் மார்கன் 2 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 18 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட், பிஷ்னோய் 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4