கார் விபத்தில் மரணமடைந்த டிக் டாக் பிரபலம்

#Death
Prasu
4 years ago
கார் விபத்தில் மரணமடைந்த டிக் டாக் பிரபலம்

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வயது 19). இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவரது வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, 2.8 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் 7.57 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இவர் சில தினங்களுக்கு முன் சொகுசு காரில் சென்றுள்ளார். அவருடன் மேலும் நான்கு பேர் காரில் இருந்துள்ளனர். கார் மிக வேமாக சென்ற நிலையில் சாலையோரத்தில் இருந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மரத்தின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் கேப்ரியல் மற்றும் அவருடன் சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் விபத்திற்குள்ளாவதற்கு சற்று முன்புதான் காரில் இருந்தபடி எடுக்கப்பட்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

போலீசார் காரை நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் காரை நிறுத்துவதற்கான போலீசார் விரட்டிச் சென்றபோது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4