சுவிற்சலாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை.

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை.

சுவிற்சலாந்தில் செப்டம்பர் 30ம் திகதி முடிவடைந்த 24மணி நேரத்தில் கொவிட் தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் 507 பேரும்,  அதில் தீவிர சிகிச்சை பிரிவில் 177 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அன்று ஒருவர் கொவிட் தொற்றுக்காரணமாக மரணமடைந்துள்ளார்.

செப்டம்பர் 20ம் திகதியிலிருந்து சுவிஸிற்குள் நுழையும் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி ஏற்றாதவிடத்து அல்லது கொவிட் தொற்றினால் குணமடைந்திருப்பின் கட்டாயமாக ஒரு மறை கொவிட் பரிசோதனை பெறுபேற்றை காண்பிக்க வேண்டும். அதே வேளை 4-7 நாட்களில் நாட்டுக்குள் வந்ததும் மற்றுமோர் மறை பெறுபேற்றை காண்பிக்க வேண்டும்.

செப்டம்பர் 13ம் திகதியிலிருந்து உள்ளக பொது இடங்களுக்கு செல்வதாயின் உதாரணமாக உணவகங்கள், தவறணைகள், நுாதசாலை அல்லது உடற்பயிற்சி நிலையங்களுக்கு நீங்கள் கொவிட் சான்றிதழை காண்பிக்க வேண்டும். இது வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரை இருக்கும். இந்த அழுத்தங்களை அரசாங்கம் நான்காம் கொவிட் அலையானது வைத்தியசாலையில் கொடுக்கும் அழுத்தங்களை குறைக்கவேயாகும்.

ஜுன் 26 படி முகக்கவசம் அணிதல் கட்டாயம் இல்லை. ஆனால் திறந்த வெளியரங்குகளுக்கு செல்லும் போது 10000 பேருக்கு அதிகமாக கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு கொவிட் சான்றிதழை காண்பிக்க வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4