மன்னாரில் 9 கிலோ ஐஸ் உடன் இருவர் கைது 

#Mannar #Arrest
Prathees
4 years ago
மன்னாரில் 9 கிலோ ஐஸ் உடன் இருவர் கைது 

மன்னார், முருங்கன் பகுதியில் 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்துஇ முருங்கன் நிலையம் அருகே உள்ள பொலிஸ் காவல் தடுப்பில் லொறி ஒன்றை சோதனைக்காக மறித்துள்ளனர்.

எனினும் குறித்த லொறி  கட்டளைகளை மீறி சென்ற  நிலையில் லொறியை துரத்திச் சென்று போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியாவைச்  சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4