ஏமாற்றத்தில் அமைச்சர் பந்துல: அரசியலில் இருந்து விலகத் தீர்மானம்

#Bandula Gunawardana
Prathees
4 years ago
ஏமாற்றத்தில் அமைச்சர் பந்துல: அரசியலில் இருந்து விலகத் தீர்மானம்

அதிகம் பேசப்படும் வெள்ளைப்பூடு மோசடியில் தனது பெயரை பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டப்படுவதாக வர்த்தக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் அரசாங்கத்திலிருந்து நீதி கிடைக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்குச் சொந்தமில்லாத  அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகளைப் பற்றியும் இதுவரை தான் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காமல் அமைதியாக இருப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தினால் வெள்ளைப்பூடு கொள்கலன்களை வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துலவிடம்  சீஐடியினர் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலங்கள் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4