அவுஸ்திரேலியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

#Australia
Yuga
4 years ago
அவுஸ்திரேலியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டவர்களின் வருகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளதாவது, கடந்த 18 மாதங்களாக பெரும்பாலான குடிமக்களும், நிரந்தர குடியேற்ற உரிமை பெற்றவா்களும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்டவா்களில் 80 சதவீதத்தினா் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு இந்தத் தடை நீக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த இலக்கு அடுத்த மாதம் எட்டப்படும் என்பதால், வெளிநாட்டுப் பயணத் தடை நவம்பரில் இரத்துச் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எனினும், வெளிநாட்டுப் பயணிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கான திகதி தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4